சென்னை,டிச.17- துணை வாக்காளர் பட்டி யலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடை பெறவுள்ளதையொட்டி, வெளியிடப்பட்ட துணை வாக் காளர் பட்டியலில், தமிழகத் தில், மொத்தம் 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சம் பேரும் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர் கள் 5 ஆயிரத்து 924 பேர் உள் ளனர். கூடுதலாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 571 பேர் துணை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.