மத்திய அரசின் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை 2020-யை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மேற்கு மாநகரக்குழுவின் சார்பில் கந்தம்பட்டி, வண்டிக்காரன்நகர், பிள்ளையார் நகர் உள்ளிட்ட இடங்களில் இ-மெயில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கணேசன், மாநகரத் தலைவர் கண்ணதாசன், மாநகரச் செயலாளர் வி.ஜெகநாதன், துணைச் செயலாளர் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.