tamilnadu

நல்லக்கண்ணு பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு

ஆணையர் அலுவலகத்தில் இரா.முத்தரசன் புகார்

சென்னை, ஜூலை 20 - மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பற்றி ஆபாசமாக சித்தரித்து களங்கப்படுத்தும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெருநகர சென்னை  காவல் ஆணையர் அலவலகத்தில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தர சன், அரசியல் கட்சித் தலைவர்களையும் கட்சிகளை யும் இழிவுப்படுத்தி அவதூறு செய்யும் பதிவுகள்  சமீப காலமாக மலிந்து வருகின்றன. இதன்மூலம்  வெறுப்பு அரசியலையும், பகைமை உணர்வுகளை யும் வளர்தெடுத்து சமூக மோதல்களையும் வன்முறைகளையும் உருவாக்க ஒரு கும்பல் சதி செய்து வருகிறது என்றார். தமிழ்நாட்டில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இரா.நல்லக்கண்ணு படத்தை ஆபாச மாக சித்தரித்து அசிங்கப்படுத்தும் வார்த்தைகள் அடங்கிய முகநூல் பதிவு சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது. மக்களிடம் நன்மதிப்பை பெற்ற, அவரின் எளிமையான வாழ்க்கையை களங்கப்படுத்தும் வகையில் தீய எண்ணத்தோடு பரப்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை  அலுவலகத்தின் புகைப்படத்தையும் பெண் செயல்  பாட்டாளர் ஒருவரின் படத்தையும் ஆபாசமாக சித்த ரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.இது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. இரு புகார்கள் குறித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுபோன்று செயல்படும் நபர்களை கைது செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தினார். மின்கட்டண குளறுபடிகளை கண்டித்து 22ந்  தேதி திமுக சார்பில் நடைபெறும் கருப்பு கொடி  போராட் டத்தை  வரவேற்கிறோம். ஊடகத்துறை  கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகி றது. மத்திய அரசிற்கு எதிராக செயல்படுவதாக  முக்கிய செய்தி சேனல்களில் பணியாற்றும்  தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களை பணி நீக்கம் செய்ய நிர்வாகம் நிர்ப்பந்திக்கப்படு கிறது. இதை அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றி ணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

;