மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம்
பென்னாகரம், ஆக. 18- மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். சதவிகித அடிப்படையில் வேலை வழங்கும் போக்கைக் கைவிட்டு, விண்ணப் பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாயன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் பகுதிக் குழு தலைவர் மாரியப்பன் தலைமை வகித் தார். இதில், மாவட்டச் செயலாளர் கே.ஜி.கரு வூரான், இணைச்செயலாளர் இடும்பன், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வி.ரவி, சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை தொடர்ந்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கோரிக்கைகள் தொடர் பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவ தாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன டிப்படையில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து கொண்டனர்.