tamilnadu

img

வாக்காளர் பட்டியலை திருத்த செயலி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஆக.28- வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்வதற்கு வசதியாக விரை வில் செல்போன் செயலி அறி முகம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரி வித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சென்னை தலைமைச் செயல கத்தில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சிபிஎம், சிபிஐ, திமுக, அதிமுக, காங்கி ரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சி களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணைய அதிகாரிகளான கூடு தல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரி மணிகண்டன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு,“வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்  30 ஆம் தேதி வரை நடைபெறும்.  அதன்பின்னர், வரைவு வாக்கா ளர் பட்டியல் அக்டோபர் 15 ஆம்  தேதி வெளியிடப்படும்” என்றார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்  தொடர்பாக நவம்பர் 2, 3, 9 மற்றும்  10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த  முகாமை வாக்காளர்கள் பயன்ப டுத்தி உரிய திருத்தங்கள் செய்து கொள்ளலாம். nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்  காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இந்த இணை யத்தளத்தில் வாக்காளர்கள் ஆதாரத்துடன் உரிய திருத்தங் கள் செய்யலாம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 14  ஆவணங்களில் ஒன்றை பதி வேற்றம் செய்யவேண்டும். இது தவிர வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்யும் வகையில், செல்போன்  ஆப் விரைவில் அறிமுகப்ப டுத்தப்படும்.  தேர்தல் ஆணையம் சார்பில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டி யல் சரிபார்ப்பு கூட்டம் நடை பெறும். ஜனவரி மாதம் இறுதி  வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படும் என்றும் அதிகாரி கூறினார்.