சென்னை, ஜூலை 29- அஞ்சல்துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11 அன்று மத்திய அரசு உத்தரவு பிறப் பித்தது. இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சில கேள்வி களை எழுப்பி விரிவான விளக்கம் கோரி யிருந்தது. இதனையடுத்து நீதிபதிகள் மணிக் குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு மத்திய அரசு தரப்பில் உதவி சொலி சிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் விளக்க அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கி லம் அல்லது மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கும் மே 10ஆம் தேதி அறிவிப்பு தொடரும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட் டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று ஜூலை 11இல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப் பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், செவ்வாயன்று (ஜூலை 30) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசு வழக்கறிஞ ரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.