tamilnadu

img

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு

சென்னை, மார்ச் 21- உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகை யில் பிரதமர் மோடியின் அறிவிப்பின் படி இன்று (ஞாயிறு) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படு கிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பேருந்துகள், லாரிகள், கால்டாக்சி கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது. ஓட் டல்கள், மார்க்கெட்டுகள் இயங்காது, பால் விநியோகம் பெரும்பாலும் இருக் காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு பெரும்பாலான ரயில்கள் ரத்து செய் யப்படும் என்று தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது. 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 22-ஆம் தேதி இரவு 10 மணி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் இயக்கப்படாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. 22-ஆம் தேதி காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பெரும்பாலான நீண்ட தூர மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்களும் இயக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் அத்தியாவசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மிகக் குறைந்த எண்ணிக்கை யிலேயே இயக்கப்படும் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. 

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு ஞாயிறு மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதாக கிரேட்டர் தமிழ்நாடு குடிநீர் உற்பத்தியா ளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அரசு போக்குவரத்துக் கழ கங்களின் பேருந்துகள் அனைத்தும் இயங்காது என்று முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தனி யார் பேருந்து மற்றும் சிற்றுந்துகளின் உரிமையாளர்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் ஊரடங்கை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நாளை ஒரு நாள் நிறுத்தி வைக் கப்படுவதாக அதன் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;