tamilnadu

img

தடையை மீறிய 4100 பேர் மீது வழக்கு

சென்னை, மார்ச் 27- தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடினாள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. வீட்டிற்குள் இருக்காமல் அரசின் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது காவல்துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் 4100 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சிறப்புக் குழு

மத்திய-மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை தமிழகத்தில் கண்காணிப்பதற்காக மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது. சீமா அகர்வால் தாமரைக்கண்ணன் சேஷசாயி உள்ளிட்ட 6 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தலைவர் திரி பாதி தெரிவித்திருக்கிறார்.

சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதை மீறுவோர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு உடனுக்குடன் இந்தக் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.