tamilnadu

img

உணவு, குடிநீர் வழங்கவில்லை

தேர்தல் பணியாளர்கள் போராட்டம்

திண்டுக்கல்,ஜன.3- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 27  மாவட்டங்களில் மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய  தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடை பெற்றன. ஜனவரி 2 அன்று தொடங்கிய வாக்கு  எண்ணிக்கை, 3 ஆம் தேதியன்றும் தொடர்ந்து  நடைபெற்றது.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை பணி யில் ஈடுபட்ட ஊழியர்களில் சிலருக்கு முறை யாக உணவு வழங்கப்படவில்லை என புகார்  எழுந்தது. ஒருசில இடங்களில் போராட்டங்க ளும் நடைபெற்றது.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, பழனி நெடுஞ்சாலையில், தேர்தல் பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்க ளிடம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றி யத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு உணவு மற்றும் தேநீர் வழங்கவில்லை என கூறி, தேர்தல்  நடத்தும் அலுவலரை பணியாளர்கள் முற்று கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாக்கு  எண்ணிக்கையில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து பணியாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டனர்.  தருமபுரி ஒன்றியம் 8 மற்றும் 18 ஆவது  வார்டில் திமுக முன்னிலையில் இருந்ததாக வும், திடீரென அதிமுக வெற்றிபெற்றதாக அறி விக்கப்பட்டதாகவும் கூறி, திமுக எம்.பி  செந்தில்குமார் உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;