இந்தியன் ஃபிட்னஸ் பெடரேசன் மற்றும் மதுரை நியூ வேர்ல்டு ஜிம் இணைந்து நடத்திய மிஸ்டர் மதுரை 2019 ஆணழகன் போட்டிகள் மதுரை, கே.கே.நகர், நீதியரசர் கிருஷ்ணய்யர் மஹாலில் நடைபெற்றது. இதில் மிஸ்டர் மதுரை 2019 ஆணழகன் பட்டத்தை மதுரை நியூ வேர்ல்டு ஜிம் ஏ.சாதிக் வென்றார். பட்டத்தையும், பரிசுகளையும் மிஸ்டர் வேர்ல்டு பட்டம் வென்ற ஆர்.தனசேகரன் மற்றும் டீமேட்டர் புட் சப்ளிமென்ட் மேலாளர் ஜோசப் வசந்தகுமாரும் இணைந்து வழங்கினர்.