tamilnadu

img

நல்லாட்சி விருது வழங்குவதா?

திருமண நிகழ்வில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, ஜன. 27- மக்களுக்கு எதிரான திட்டங்களை ஆத ரிக்கும் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது  வழங்குவதா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்புத் தலைவர் விக்கிரமராஜா இல்ல  திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை யாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இன்றைய இளைஞர்கள் தவறுகளை தட்டிக்கேட்கும் துணிச்சலுடன் இருக்க வேண்டும்.  எதற்கெடுத்தாலும் மத்திய அர சுக்கு தலைவணங்கும் தமிழக அரசு போல மணமக்கள் மவுனமாக இருக்கக்கூடாது. மனம் திறந்து பேச வேண்டும். உண்மைக்கு துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.நாட்டின்  நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமை யாக நாம் எதிர்க்கிறோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றின் மூலம் மக்களை மதம், சாதி ரீதியாக பிரிக்கும் முயற்சியில் பாஜக ஈடு பட்டு வருகிறது. மத்திய ஆட்சிக்கு ஆதர வாக இருந்தவர்கள்கூட மக்களை பிரித்தாள  நினைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை  எதிர்க்கிறார்கள். ஆனால் தமிழக அதிமுக  அரசு எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கி றது. மக்கள் நலன்களில் அக்கறை காட்ட வில்லை. மத்திய அரசுக்கு அடங்கிப்போகி றது என்றும் அவர் குற்றம் சாட்டினார். சுயமரியாதை இயக்கம் கண்டு பெண்க ளுக்கான சம உரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார் என்றும், இன்று அவரையே விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் நல்லாட்சி நடத்துவதற்காக விருதுகளை வென்றுள்ளதாக முதல மைச்சர் அடிக்கடி கூறி வருகிறார் என்றும் விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.

;