உதகை, ஜூலை 18 - கூடலூரில் தனியார் தோட்டத்தில் உள்ள சேற்றில் சிக்கி காட்டு யானை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள வேடன் வயல், மணல் கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு தேடி ஊருக்குள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இப்பகுதிலுள்ள பாக்கு மரங்களிலிருந்து பாக்குகளை சேகரிக்க அருகில் உள்ள மலைவாழ் கிராம மக்கள் சிலர் வெள்ளி யன்று தோட்டத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, தோட்டத்தில் யானை ஒன்று படுத்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந் தனர். இதன்பின் வனத்துறையினருக்கு தகவல் தர சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, சுமார் 20 வயது ஆண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. யானை உணவு தேடி வரும்போது சேற்றில் சிக்கி வெளி யேற முயன்றபோது உடல் சோர்வு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், யானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.