tamilnadu

img

ஆட்டத்தை நம்மிடமிருந்து தொடங்குவோம்!

திருச்சி கல்வி உரிமை மாநாட்டில் பொதுச்செயலாளர் ஆத வன் தீட்சண்யா பேசியது: தேசியக் கல்விக் கொள்கை குறித்து மின்னஞ்சலில் 77 ஆயிரம் கருத்துக்கள் மட்டுமே வந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை என்றும் பொய்யான செய்தியை மத்திய அரசு பரப்புகிறது. இது முழுக்க முழுக்க தவறாக தகவல், பல கோடிப் பேர் இது குறித்து கருத்துத் தெரி வித்துள்ளார்கள். இந்த கல்விக் கொள்கையே வேண்டாம் என்று வலி யுறுத்தி உள்ளனர்.  இந்தக் கல்விக் கொள்கையில் குறிப்பிட் டுள்ள பல விசயங்கள் ஏற் கெனவே நடைமுறைக்கு வந்து விட்டது. இனி இது குறித்து வியாக்கியானம் தேவை யில்லை. இதை மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும் என்பதே நம்முன் உள்ள கேள்வி. முழுக்க முழுக்க ஜனநாயகப் படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தை உருவாக்க நாம் திட்டமிட வேண்டும். நம்மிடமும் கல்வியாளர்கள் உள்ளனர். ஆட்டத்தை நம்மிட மிருந்து தொடங்குவோம். இனி பந்து நமது கையில். சமூகத்தின் மனசாட்சி நம்மை நோக்கி தள்ளுகிறது. ஆனால், அது அவ்வ ளவு எளிதல்ல. இதுமாதிரி வசதியோடு உட்கார்ந்து விவாதிப்பது மாதிரி இருக்காது. ஏராளமான அடக்குமுறைகளை சந்திக்க வேண்டி வரும். சந்திப்போம். சமூக நீதிக் காலத்தில் 200 ஆண்டு கள் பின்னோக்கிச் செல்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார்.