tamilnadu

img

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மாணவன் கைது

திருப்பதி,செப்.25-  மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் சென்னை மாணவர் உதித் சூர்யா குடும்பத்தினருடன் திருப்பதி மலையடிவாரத்தில் கைது செய்யப்பட்டார். மாணவர் உதித்சூர்யா, தனக்கு முன் ஜாமீன் வழங்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே மனுதாரர் இந்த வார கடைசியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு சரண் அடையலாம். அவ்வாறு சரண் அடைந்தால், இந்த முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக மாற்றி அடுத்த வாரம் விசாரிக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் உதித் சூர்யாவின் செல்போன் சிக்னல் திருப்பதியை சுட்டிக் காட்டியதால், போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது திருப்பதி மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருந்த உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் தாயார் கயல் விழியையும் தனிப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் மூன்று பேரும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்கள் தேனி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

;