tamilnadu

img

ஆற்றின் குறுக்கே பாலம் இருந்திருந்தால்...

நீடாமங்கலம், ஜன.18- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத் திற்கும் கிழக்கே வையகளத்தூர் கிரா மத்தின் அருகே வெண்ணாற்றின் குறுக்கே படத்தில் நாம் காணும் ரயில்வே கர்டர் பாலம் உள்ளது. பொங்கல் தினத்தன்று வையகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் உமா இந்த பாலத்தை கடந்து செல்லும் போது பிற்பகல் 3 மணிக்கு திருவாரூரிலிருந்து ரயில் வந்து விட்டது.

ஏணி வழியாக இறங்கிய போது...

பாலத்தின் நடுவிலிருந்த ஏணி வழி யாக கீழே இறங்க அந்த பெண் முயற்சித்தபோது தடுமாறி ஆற்றில் அந்த பெண் விழுந்து விட்டார். ஆற்றில் தண்ணீர் வரத்து அன்று அதிகமாக இருந்ததால் அந்த பெண்ணை காப் பாற்ற முடியவில்லை. நீடாமங்கலம் ’மூணாற்றுத் தலைப்பில் வெண்ணாற் றின் ஷட்டரை அடைத்து ஆற்றில் தேடியபோது மறுநாள் தான் அந்த பெண்ணின் சடலம் கிடைத்தது. அந்த ரயில்வே கர்டர் பாலத்திற்கு அருகில் ஒரு பாலம் இருந்திருந்தால் ஒரு பெண் குழந்தையின் தாயான உமா இறந்திருக்க மாட்டார். இது தான் மக்களின் சோகமாக மாறியிருக்கி றது.  நீடாமங்கலத்திற்கும் கிழக்கே, வடகிழக்கே உள்ள 15 கிராமங்களின் பள்ளிக் குழந்தைகள் இந்த பாலத்தை கடந்து தான் தினமும் நீடாமங்கலம் மேனிலைப்பள்ளி உயர்நிலை பள்ளி களுக்கு செல்கிறார்கள்.  பயித்தஞ்சேரி, அம்பகுடையான், குச்சிபாளையம், அரவத்தூர் கிளியூர், மாணிக்கமங்கலம் சேரநத்தம், வேடம் பூர், வையகளத்தூர், ஒளிமதியில் ஒரு பகுதி உள்ளிட்ட ஏறத்தாழ ஐயாயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக் கும் இந்த பாலம் ஒன்றுதான் அவசர வழி. இந்த ஆற்றின் குறுக்கே உள்ள இந்த ரயில்வே கருடர் பாலத்தின் வழி யாக பள்ளிக் குழந்தைகள் செல்வது எப்போதும் ஆபத்தானது என்பதை விவ ரித்தும் அந்த கர்டர் பாலத்திற்கு அரு கில் வையகளத்தூரில் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம்  கட்டப்பட வேண் டும் என 21.9.2018  தீக்கதிரில் விரிவான செய்திக் கட்டுரை படத்துடன் வெளி யாகியிருந்தது.

5 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை

ஆனால் இதன் அவசியம் அப் போது வருவாய் வட்ட நிர்வாகத்திற் கும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகத்திற் கும் உறைக்கவில்லை. பாலத்திற்கும் கிழக்கே திருச்சி  வேளாங்கண்ணி என்.எச்.67 தேசிய நெடுஞ்சாலை செல்கி றது. இந்த பாலத்தின் வழியே காரைக் கால் - திருச்சி மார்க்கத்தில் செல்லும் அனைத்து விரைவு மற்றும் பாசஞ்சர் ரயில்கள் சராசரியாக தினமும் 22 ரயில்கள் கடந்து செல்கின்றன.  என்.எச். 67 சாலையில் நீடாமங்க லம் ரயில்வே நிலையத்தின்  லெவல் கிராசிங் கேட் பள்ளி நேரத்தில் மூடி யிருக்கும் என்பதால் கிராமத்து மாண வர்கள் பேருந்தில் செல்லாமல் இந்தப் பாலத்தில் தான் தினமும் செல்கின்ற னர். நீடாமங்கலத்திற்கு செல்லும் பெண்கள், மாணவர்கள் மட்டுமல்லாது நகருக்குள் முறைசாரா தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் இந்தப் பாலத்தை விட்டால் அந்த தேசிய நெடுஞ்சாலையில் 5 கிமீ சுற்றிச் செல்ல வேண்டும்.

நடைபாதை பாலம்

2017 ஆம் ஆண்டு  ஜுலை மாதம் அரையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் இந்த பாலத்தை கடக்கும் போது ரயில் வந்து விட்டதால் பதற்றத்தில் பாலத்திலிருந்து குதித்த தில் படுகாயமடைந்தான். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பினான். அபாயம் உள்ள இந்த பாலத்தின் வழியே தங்கள் பிள்ளைகள் செல்லக் கூடாது என்பதற்காக இந்தப் பாலத்திற்கு அருகே 100 மீ்ட்டர் தெற்கே ஒரு நடைபாதை பாலமாவது  அமைக்க வேண்டும் என்பது இந்த கிராம மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கை.  இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு வந்து விட்டதால் நீடாமங்கலம் ஒன்றிய மக்கள் பிரதிநிதி கள் இதில் உடனடி கவனம் செலுத்தி வையகளத்தூரையும் பழைய நீடா மங்கலத்தையும் இணைக்கும் பாலம் ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வருவாய் வட்டாட்சியர் இதன் அவசர அவசிய தேவை குறித்து சம்பந்தப்பட்ட துறை யினருக்கு ஒரு முன் மொழிவினை அனுப்புவதும் பொருத்தமானதாக இருக்கும். இதையே அப்பாலத்திற்கு அருகில் உள்ள கிராம மக்களும் எதிர் பார்க்கிறார்கள்.

நமது சிறப்பு நிருபர்


 

;