tamilnadu

img

‘நான் ஒரு விவசாயி’ எடப்பாடி பழனிசாமி பாசாங்கு

இராமநாதபுரம்:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். இந்த சட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த அதிமுக அரசின் முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி இராமநாதபுரம் மாவட்ட கொரோனா ஆய்வுக் கூட்டத்தின் போது, மீண்டும் மீண்டும் தான் ஒருவிவசாயி எனக் கூறி பாசாங்கு செய்தார்.இராமநாதபுரத்தில் அவர் பேசுகையில், “பலர், விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள் என்று எங்களைச் ல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கனவே தெளிவு படுத்தியிருக்கிறேன், நான் ஒரு விவசாயி. விவசாயக் குடும்பத்தில் பிறந்து, விவசாயியாக இருக்கின்ற காரணத்தால்தான் விவசாயிகள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங் களை நன்றாக உணர்ந்து, அந்த விவசாயிகளுடைய துன்பங்களை களைய வேண்டுமென்பதற்காகத்தான் எவ்வளவு செலவானாலும் அதை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்து,  செயல்படுத்த இருக்கிறோம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்காண்டுகளில் 3,50,220 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,316.63 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.அதேநேரத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதா குறித்து எதுவும் பேசாமல் சாமர்த்தியமாக நழுவிக்கொண்டார்.மத்திய மோடி அரசு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கும் வகையில் புதியவேளாண் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு அதிமுக மக்களவை உறுப்பினரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஒ.பி.ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், அதே நேரத்தில் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் புதிய வேளாண் மசோதாவில்விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதகமான அம்சங்களை எடுத்துரைத்தார். இதற்கு பதிலளிக்க முடியாத அதிமுக தலைமையும், தமிழக அரசும் அது எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் கருத்து; கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது எனக் கூறிநழுவியது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒரு உறுப்பினர் ஒரு மசோதாவின் மீது பேசுகிறார் என்றால் அக்கட்சி கொறாடாவின் ஒப்புதலோடு தான் பேசமுடியும். அப்படிபேசும் நபரின் கருத்து கட்சிக்கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர தனிநபர் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால், அதிமுக புதிய வேளாண் மசோதாவில் இரட்டைவேடம் போடுகிறது என்பதை ரவீந்திரநாத்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோரின் உரை தெளிவு படுத்துகிறது.இந்தப் பின்னணியில் நான் ஒரு விவசாயி என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடி, முதல்வர் பாசாங்கு செய்துள்ளார்.

;