tamilnadu

img

மனிதச் சங்கிலி இயக்கம்: விழுப்புரத்தில் 500 பேர் மீது வழக்கு

விழுப்புரம், ஜன. 31- குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய  சட்டங்களை எதிர்த்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்பப்  பெற வலியுறுத்தியும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு  சார்பில் விழுப்புரத்தில் மனித சங்கிலி போராட்டம் 30 ஆம் தேதி நடைபெற்றது. ரயில் நிலையத்திலிருந்து நான்கு முனை சிக்னல் வரை நடை பெற்ற இந்த மனித சங்கிலி போராட்  டத்தில் சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவள வன், திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து  கண்டன கோஷம் எழுப்பினர்.

துரை. ரவிக்குமார் எம்.பி.,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், தி.மு.க., மாவட்ட பொரு ளாளர் புகழேந்தி, காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் குலாம்மொய்தீன், விடுதலை சிறுத்தைபொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், தமுமுக, மாவட்டச் செயலாளர் முஸ்தாக்தீன் உட்பட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி இந்த போராட்டம் நடந்ததாக பொன்முடி, எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி உட்பட 500 பேர்  மீது விழுப்புரம் மேற்கு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்தனர்.

;