tamilnadu

img

ஆளுநர் உரை: முக்கிய அம்சங்கள்

சென்னை, ஜன. 6- தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது உள்பட பல முக்கிய அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:  சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் பங்களிப்பின்  வாயிலாக, விரிவான பகுதி மேம்பாட்டு  அணுகுமுறையைக் கடைபிடித்து உல கத்தரத்திலான உட்கட்டமைப்புகளுடன் ஆறு சுற்றுலா வட்டங்களில் 295 சுற்று லாத் தலங்கள் மேம்படுத்தப்படும்.

விபத்து குறைந்துள்ளது

2016ஆம் ஆண்டில் 71,431 ஆக இருந்த  சாலை விபத்துகளின் எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டில் 63,923 ஆகவும், சாலை  விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் 16,092இல் இருந்து 2018ஆம் ஆண்டில் 11,378 ஆகவும் குறைந்துள்ளது. சாலை விபத்துகளில் உயி ரிழந்தோரின் எண்ணிக்கை, 2010ஆம் ஆண்டில் 10,000 வாகனங்களுக்கு சராசரி யாக 12ஆக இருந்தது. 2019ஆம் ஆண்டில்  இது மூன்றாகக் குறைந்துள்ளது.

மின்சார வாகனம்

இந்திய அரசின் பேம் 2 திட்டம் மற்றும்  ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவி யுடன், மாநிலப் போக்குவரத்துக் கழகங்  கள் மின்சார வாகனங்களை பெருமள வில் இயக்கவுள்ளன.

ஒருங்கிணைந்த போக்குவரத்து

எதிர்காலத்தில் அனைத்துவகை போக்குவரத்து வழிமுறைகளையும் ஒருங்கிணைப்பது அவசியமாகும். ‘சென்னைப் பெருநகர ஒருங்கி ணைக்கப்பட்ட பன்முகப் போக்குவரத்து ஆணையச் சட்டம்’ இயற்றப்பட்டு, அதற்  குண்டான விதிகளும் அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது. ‘சென்னை மாநகரக் கூட்டாண்மை’ என்ற தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டத்தை உலகவங்கி யின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த தமி ழக அரசு உத்தேசித்துள்ளது. அதிகாரம்  பெற்ற சென்னைப் பெருநகர ஒருங்கி ணைக்கப்பட்ட பன்முகப் போக்குவரத்து ஆணையத்தின் மூலமாக, சென்னை நக ரின் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து, மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தினை வழங்குவதை ஒரு  முக்கிய இலக்காக இத்திட்டம் கொண் டுள்ளது. 

9 மருத்துவக் கல்லூரிகள்

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி,  திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திரு வள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 9 புதிய மருத்து வக் கல்லூரிகளை நிறுவுவதற்கான பணி கள் 3,267.25 கோடி ரூபாய் செலவில் இந்த  ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாதிரி தொகுப்பு பள்ளிகள்

எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை யிலான வகுப்புகளுடன் மாதிரி தொகுப்பு பள்ளிகளை செயல்படுத்தும் திட்டமானது, தற்போது  மாநிலத்திலுள்ள 120 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்களுக்கு கடன்

2019-20 ஆம் ஆண்டில் மாநிலத்தி லுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு 12,500  கோடி ரூபாய் அளவிற்கு கடன் இணைப்பு  வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் அசையா சொத்து வரம்பு உயர்வு

சமூகப் பாதுகாப்பு, முதியோர் ஓய்வூதி யத் திட்டத்தின் கீழ் வறுமை நிலையைக் கணக்கிடுவதற்கான அளவுகோலை இந்த அரசு தளர்த்தியுள்ளது. பயனா ளிக்குச் சொந்தமான அசையாச் சொத்து மதிப்பின் வரம்பு 50,000 ரூபாயிலிருந்து 1,00,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அசையாச் சொத்தின் வரையறையில், இலவச வீடு வழங்கிடும் திட்டத்தில் அரசி டமிருந்து பெறப்பட்ட வீடு சேர்க்கப்பட மாட்டாது. 

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும்

தமிழக அரசு, ஆதி திராவிடர், பழங்குடி யினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கென மாநிலத்தில் நடை முறையில் உள்ள 69 விழுக்காடு இட  ஒதுக்கீட்டை முழுமையாகப் பாதுகாக்கும்.  வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளி களுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு  உறுதி செய்யப்படுவதுடன், அனைத்து நிலைகளிலும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்க ளுக்கு தகுந்த பணியிடங்கள் அடையா ளம் கண்டறியப்பட்டுள்ளன. 

நதிகள் இணைப்பு

தமிழக அரசு தமிழ்நாட்டிற்குள் பாய்  கின்ற நதிகளை இணைக்கும் பணியை மேற்கொள்ளும் விதமாக காவேரி-குண் டாறு ஆகிய இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும். இதில் முதல் கட்டமாக,  காவேரி-தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள் ளப்படும். 

கால்நடை மருத்துவக் கல்லூரி

சேலம் மாவட்டம் தலைவாசலில், 1,000  கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை அறி வியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கி ணைந்த கல்வி நிறுவனம் மற்றும் கால்நடை  மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

மீன்பிடி துறைமுகம்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பள்ளத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி, முதுநகரில் 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி துறை முகங்களை அமைப்பதற்கு மத்திய அரசு  மற்றும் நபார்டு வங்கியிடமிருந்து இசைவு  பெறப்பட்டுள்ளது.

சாலைகள்

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன்  6,448 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை –  கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தி னால் பயனடையக்கூடிய பகுதியில் சாலைத் தொடரமைப்பை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை யின் நிதியுதவியுடன் 2,673.42 கோடி ரூபாய்  மதிப்பீட்டில், எண்ணூர் துறைமுகத்தி லிருந்து தச்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சுற்றுச் சாலை திட்டத்தின் முதற்கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.











 

;