tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் உதயகுமார் :- தமிழகத்தில் அந்நிய முதலீடு 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ச.சா - என்ன தொழில் உருவாகிருக்குனு சேத்து சொல்வீங்களா..??
 

பாஜக எம்.பி. இல.கணேசன் :- தார்மீக ரீதியில் பாஜகதான் மகாராஷ்டிராவில் பதவிக்கு வந்திருக்க வேண்டும்.
ச.சா - தார்மீக ரீதியா பீகார்ல யார் பதவில இருக்கணும்..??
 

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி:- பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது பற்றி நான் கவலைப்படவில்லை.
ச.சா - நீங்க நிதியமைச்சரா இருந்தப்பயே அதப்பத்தி கவலைப்படலையே..??
 

பாமக நிறுவனர் ராமதாஸ் :- கூட்டணி தர்மத்துக்காகவே குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளித்தோம்.
 ச.சா - இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் கூட்டணில இருக்குற வரைக்கும் பேச மாட்டீங்களா..?!?

;