தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை காலை 11.30 மணிக்கு வெளியிடுகிறார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
ஜனவரி 5ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு, ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.