tamilnadu

img

‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்’ அபுபக்கர்

சென்னை, பிப். 18 - எந்த நிலையிலும் சிறுபான்மையி னருக்கு உற்ற தோழனாக அதிமுக அரசு இருக்க வேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர் வேதனையோடு கூறினார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப்.18) நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் பேசிய அவர், குடி யுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றால் சிறுபான்மை மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

நீங்கள் (அதிமுக அரசு) என்னதான் விளக்கம் சொன்னாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு ரையிலும், மகாத்மா காந்தியும், முதல் குடியுரசு தலைவர் ராதாகிருஷ்ணனும் குடியுரிமைக்கு மதத்தை அளவாக கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளனர் என்றார். அப்போது குறுக்கிட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிஏஏ குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்ப தாலும், ஏற்கெனவே இதுகுறித்து பேசப்  பட்டுள்ளதாலும் மீண்டும் பேச அனு மதிக்க கூடாது என்றார். இதனைத் தொடர்ந்து, அபுபக்கர் மேற்கண்ட வேதனையை வெளிப்படுத்தினார்.