tamilnadu

img

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

சென்னை, ஏப்.28- அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி உயர்வு மற்றும் வரு டாந்திர ஈட்டிய விடுப்பு காண தொகையை  நிறுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா தடுப்பு பணியின் சிக்கன நட வடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு ஊழி யர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அக விலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அரசு ஊழி யர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம்  வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள் ளது. அக விலைப்படி நிலுவைத் தொகை வழங்கு வதும் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

முன்னதாக அரசு ஊழியர்களிளின் ஈட்டிய  விடுப்பு சம்பளத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளி யிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் வழிமுறையை பின்பற்றி மாநில அரசும் அரசு ஊழியர்களுக்கு அநீதி  கிடைத்திருப்பதை மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், அம்மா முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செய லாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

;