tamilnadu

img

50,000 பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி

சென்னை,ஜன.27- தமிழ் நாட்டில் 11 மாவட்டங்கள் மற்றும்  கேரளாவில்  திருவனந்தபுரம் மாவட்டம், மொத்தம் 12 மாவட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (முன்னோடி வங்கி)  கீழ் செயல்படும் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையங்களினால் வெற்றி கரமாக 50000 பெண் பயனீட்டாளர்களுக்கு பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்துள்ளது.  தையல் கலை, பின்னல் கலை, அழகுக்  கலை, உணவு பொருட்கள் தயாரிப்பு, காகி தப்பை தயாரித்தல், ஆடு, மாடு, கோழி  மற்றும் மீன் வளர்ப்பு, மண்புழு உரம் தயா ரித்தல் போன்ற விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்களில் பெண் பயனீட்டாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தஞ்சாவூரில் நடைபெற்ற இதன் வெற்றி விழாவிற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்  வாக அதிகாரி திரு. கர்ணம் சேகர் தலைமை  தாங்கினார். வங்கியின் நிர்வாக அதிகாரிகள்  மு. சுவாமிநாதன் மற்றும் அஜய் குமார் ஸ்ரீவத்சவா, வங்கியின் பொது மேலாளர்  சுஷில் சந்திர மொஹந்தா,  வங்கி, தஞ்சை மண்டல மேலாளர் லக்ஷ்மி நரசிம்மன் ஆகி யோர் பங்கேற்றனர்.

;