பெரியார் சிலை காவிச் சாயம்
கோவையில் உள்ள பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டதும்,அடுத்த நாள் முக்கிய பகுதியில் உள்ள மூன்று கோவில்களின் வாசலில் டயர் எரிக்கப்பட்டும் மக்களுக்கு தெரிந்ததே.
இதனை கண்டித்து பாஜக உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.இதன் ஒருபகுதியாக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், திங்களன்று, கோவையில்செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கண்டனங்களை பதிவு செய்தார். அப்போது, அதிமுக அரசு குறித்து கடுமையான கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதை பார்க்கும் போது பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போன்று அவர்களே பிரச்சனையை உருவாக்கி ,அவர்களே அதற்கான எதிர்ப்பை காட்டுகிறார்கள்.இதற்கு மேலாக பாஜக அரசுக்கு உருதுனையாக இருக்கும் அதிமுக அரசு குறித்து கடுமையான கருத்துகளை வெளியிடுகிறார்கள் .
பாஜக போடும் தாளத்திக்கெல்லாம் ஆடும் அதிமுக அரசுக்கு இது தேவை தான்.