சென்னை
12 நாள் ஊரடங்கு துவங்கியது
சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதால் சென்னை மற்றும் அதையொட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ளி முதல் 12 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ‘கொரோனா பரவ லைத் தடுக்கும் வகையில் இந்த ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்’ என நான்கு மாவட்ட அதிகாரிக ளுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை
இறைச்சி, மீன் கடைகள் மூடல்!
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவைமூடப்பட்டன. 12 நாள்கள் முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் 2 கி.மீ சுற்றளவில் நடந்துசென்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்கலாம். 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை
கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை
இளைஞர் ஒருவர் சென்னையிலிருந்து கடந்த 15-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திரும்பிய நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் உள்ள கழிப்பறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வேலூர்
ஒரே குடும்பத்தில் 11 பேருக்கு கொரோனா
வேலூரில், `கொரோனா’ தொற்று சமூகப் பரவலாக மாறும் அபாயக் கட்டத்தை எட்டியிருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். வியா ழனன்று ஒரே நாளில் 63 பேருக்குத் தொற்று கண்டறி யப்பட்டுள்ளது. சேண்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கி யிருக்கிறது.
கோவை
3 நாள்களில் 21 பேருக்கு கொரோனா..
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர் பகுதி கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறி யுள்ளது. ராமர் கோயில் வீதி, ஆர்.ஜி.புதூர். சின்னியம் பாளையம் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களில் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை
கலங்கும் ரேசன் ஊழியர்கள்
கொரோனா பாதிப்பு, தற்போது, சென்னையில் உச்சத்தில் இருக்கிறது. இங்கு பணி யாற்றும் ரேசன் கடை ஊழியர்கள் பலரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுரேஷ் என்ற ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையிலும் தங்களை வீடு வீடாகச் சென்று, ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்க, தமிழக அரசு நிர்பந்திக்கிறது; இது மிகவும் ஆபத்தானது என ரேசன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.