tamilnadu

img

பல்கலை.யிலும் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி...

மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து திமுக உறுப்பினர் சு.புகழேந்தியின் கேள்விக்கு பதில் அளித்த தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன்,“ தமிழ் மொழி படித்தால் வேலைக் கிடைக்காது என்ற நிலையை மாற்றி காட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி. இத்திட்டத்தில் படித்தவர்களில் 1,700 மாணவர்களுக்கு முக்கிய துறைகளில் வேலை கிடைத்துள்ளது. பத்தாயிரம் மாணவர்களின் 20 மாணவர்கள் தேர்வு செய்து ஒருவார காலம் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி கொடுத்து வந்தோம்.  பல்கலைக் கழகங்களுடன் இணைந்து ஆண்டுக்கு பத்து முறை பயிற்சி கொடுக்கப்படும் என்றார்.