tamilnadu

img

ஜன. 8-ல் ஆட்டோக்கள் ஓடாது

அனைத்து  சம்மேளனங்கள்  அறிவிப்பு

சென்னை, ஜன. 2- நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கா மல் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டூவீலர், பைக் டாக்சி போக்கு வரத்தை தடைசெய்ய வலி யுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் ஜனவரி 8 அன்று பொது  வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. அனைத்து ஆட்டோ தொழி லாளர் சங்கங்கள் சார்பில்  சென்னை சிந்தாதரிப்பேட்டை யில் வியாழனன்று (ஜன. 2) நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்  பில் சிஐடியு தலைவர் எஸ். பால சுப்பிரமணியம் கூறியதாவது:- போக்குவரத்து சட்டம் என்ற  பெயரில் ஆட்டோ தொழிலாளர் களிடம் ஆயிரக்கணக்கில் அநி யாய அபராதத்தொகை வசூ லிக்கப்படுகிறது. நீதிமன்றம் தடை விதித்த பின்னரும் டூவீலர், பைக்  டாக்சி போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்பை சுரண்டும் வகையில் ஓலா, ஊபர்,  ரேபிட்டோ போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளை மத்திய-மாநில அரசுகள் அனுமதித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ் வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

மக்களவை தேர்தல் அறிக்கை யில் பெட்ரோலியப் பொருட்க ளின் வரியை ஜிஎஸ்டி வரம்புக் குள் கொண்டு வருவோம் என  பாஜக உறுதி அளித்தும் இது வரை செய்யவில்லை. போக்கு வரத்து சட்டம் என்ற பெயரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை அபராதம் போடப்படுகிறது. சாலை பாதுகாப்பு சட்டம் திரும்பப் பெறவேண்டும், டூவீலர்  டாக்சியில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவருக்கு செல்லும்  போது விபத்து ஏற்பட்டால் காப்பீடு  இல்லை என்று கூறும் நிலையில் தனியார் நிறுவனங்கள் காப்பீடு  தருவதாக பொய் வாக்குறுதியை  அளித்து வருகிறது. பொதுமக்க ளுக்கு பாதுகாப்பு இல்லாத இரு சக்கர வாகன போக்குவரத்தை தடைசெய்ய வேண்டும் இந்த கோரிக்கைகளுக்காக ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ தொழி லாளர்கள் முழுமையாக பங் கேற்கிறோம். இனோடா ஆட்டோ சங்கத்  தலைவர் அமெரிக்கை நாராய ணன், “பன்னாட்டு கம்பெனிகளின் நலனுக்காகத்தான் மத்திய-மாநில அரசுகள் செயல்பட்டு வரு கிறது” என்றார்.

இணையத்தில் ஆபாச படங்களை தடைசெய்வது போல் இந்த ஆன்லைன் போக்கு வரத்தையும் தடைசெய்ய அரசு முன்வர வேண்டும். ஆர்டிஓ அலு வலகங்களில் ஆன்லைன் நடை முறையால் ஏற்படும் கால தாம தத்தையும், லஞ்ச ஊழலையும் தடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். என்பிஆர், சிஏஏக்கு எதிராக ஆட்டோ  தொழிலாளர்கள் வீடு களிலும், ஆட்டோ நிறுத்தங்களி லும் கோலமிட்டு அரசுக்கு எங்கள்  கண்டனத்தை பதிவு செய்வோம் என்றும் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, ஆட்டோ சங்க நிர்வாகிகள் பழனி  (தொமுச) ஏ.எல்.மனோகரன், முகமது ஹனிபா, ஜெயகோபால் (சிஐடியு), மு.சம்பத், சுந்தரம் (ஏஐடியுசி), பி.பரமேஸ்வரன், கே.முருகன் (எச்எம்எஸ்), மணி  (இனோடா), கடம்பன் (எல்எல்எப்), எம்.ஜி.அழகேசன் (ஐஎன்டியூசி), ஆறுமுகம் (எம்எல்எப்), எச்.முசாமில், கே.ஜெ.பஸீர்அலி (எஸ்டிடியூ) ஆகியோர் உடனிருந்தனர்.

;