tamilnadu

img

ஆண்டிப்பட்டி நகரில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கடைகளை திறக்க உத்தரவு

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி நகரில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் ஊரடங்கு முடியும் வரையில் வாரத்தில் 4 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு) மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்று போலீசார் வணிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க போவதாக கூறி தினமும் ஆண்டிப்பட்டியில் சகஜமாக உலாவி வருகின்றனர்.

அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருவதாகவே கூறுவதால் மக்கள் கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது-. கூட்டத்திற்கு ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகரன், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினர்.  கூட்டத்தில் ஆண்டிப்பட்டி நகரில் ஊரடங்கையும் மீறி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் நோய்பரவும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் பெரும்பாலான கடைகளிலும் சமூக இடைவெளி பின்பற்றபடுவதில்லை என்று போலீசார் கூறினர். அதன்பின்னர் கூட்டத்தில் ஆண்டிப்பட்டி நகரில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு முடியும் வரையில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றுமுடிவெடுக்கப்பட்டது. மருந்துக்கடைகள் வழக்கம்போல திறந்து இருக்கும்.- இந்த முடிவினை வணிகர்களும் ஏற்றுக்கொண்டனர்.
 

;