tamilnadu

img

240 புதிய பேருந்துகளின் சேவை துவக்கம்

சென்னை, ஜன. 29- ரூபாய் 84 கோடி மதிப்பீட்டில் வாங் கப்பட்ட 240 புதிய பேருந்துகளை முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி யசைத்து தொடங்கி வைத்தார். தமிழக சட்டப்பேரவையில், 110 விதி யின் கீழ் அறிவிப்பு ஒன்றை அண்மையில்  வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.  பழனிசாமி, “600 கோடி ரூபாய் மதிப் பீட்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப் படும்” என அறிவித்திருந்தார். இதற்கான நிதி ஒதுக்கீடும் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு இருந்தது. இத னடிப்படையில் வாங்கப்பட்ட 240 புதிய பேருந்துகளை, தலைமைச் செயலகத்  தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்  பீட்டில் வாங்கப்பட்ட அம்மா அரசு நடமாடும்  2 பணிமனைகளையும் அவர் தொடங்கி வைத்தார். 

;