சென்னை, மார்ச் 31- இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் இப்படி வேகமாக பரவுகிறபோது, பாதிப்புக்கு ஆளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான அளவுக்கு இட வசதி தேவைப்படு கிறது. இதை சமாளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதையொட்டி ரயில்வே வாரியம், எல்லா மண்டல பொது மேலாளர்க ளுக்கும் அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் கூறியிருக்கும் முக்கிய அம்சங்கள்:
20 ஆயிரம் ரயில் பெட்டிகளை தனிமை வார்டு களாக மாற்றி அமைக்கும் தேவை ஏற்படும். முதலில் தனிமைப்படுத்தி வைக்கவும், சிகிச்சை அளிக்க வும் 5 ஆயிரம் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற வேண்டும். இதற்காக குளிர்சாதன வசதி யில்லாத, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டி களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் இந்திய பாணி கழிவறையை குளிய லறை யாக மாற்ற வேண்டும். அதற்கான வடிவ மைப்பு செய்ய வேண்டும். வாளி, குவளை, சோப்பு பெட்டி உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இது போன்ற பல தகவல்கள் அதில் குறிப்பிடப் பட்டுள்ளன. இப்படி ரயில்பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றுவது தொடர்பாக ரயில்வே வாரியமானது முன்கூட்டியே, ஆயுதப்படை மருத்துவ பணிகள், பல் வேறு மண்டல ரயில்வே மருத்துவ துறைகள், ஆயுஷ்மான் பாரத் திட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் ஆலொசனை நடத்திய தாக தகவல்கள் கூறுகின்றன.