tamilnadu

img

உலகின் 3வது ஹாட்ஸ்பாட் லத்தீன் அமெரிக்கா

பிரேசிலியா:
ஐரோப்பா, அமெரிக்காவைத்தொடர்ந்து லத்தீன் அமெரிக்கநாடுகள், கோவிட் 19 நோய்த் தொற்றின் அடுத்த முக்கிய மையமாக உருவெடுத்துள்ளன. ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் உலகின் மேற்கு பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்க மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் - அதாவது லத்தீன்அமெரிக்காவில் பிரேசில், மெக்சிகோ, பெரு உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ளன.ஏற்கெனவே வேலை யின்மை, வறுமை, ரத்தம் தோய்ந்த மோதல்கள் என பல பிரச்சனை களில் சிக்கியுள்ள பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் சமூக வாழ்வியலில் கொரோனா பாதிப்பு மிகப்பெரும் அச்சுறுத்தலாக வந்து சேர்ந்துள்ளது. குறிப்பாக அமேசான் காடுகளையொட்டி அமைந்துள்ள பிரேசிலின் பல நகரங் களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. பெரு நாட்டின் அனைத்து நகரங்களும் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளன. பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 881 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரண எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு, பொல்சானரோ அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்பைவிட 15 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் சுமார் 30லட்சம் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டி ருப்பார்கள் என்றும், ஆனால் அரசு சுமார் 2 லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிவருகிறது என்றும் சாவோ பாலோ மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் தெரிவித்துள்ளனர்.மெக்சிகோவைப் பொறுத்தவரை பாதிப்பு 40ஆயிரத்தை எட்டியுள்ளது. சுமார் 4ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோ சிட்டி நகரத்தில்தான் பாதிப்பு கடுமையாக உள்ளது.பிரேசில் தலைநகரிலும் மெக்சிகோ தலைநகரிலும் பாதிப்பு தீவிரமாக உள்ள போதிலும், அங்குள்ள அரசுகளின்ஆதரவுடன் பெரும் நிறு வனங்கள், ஊரடங்கு பற்றி கவலைப்படாமல் தொழி லாளர்கள் கட்டாயம் வேலைக்குவர வேண்டும் என்று நிர்ப்பந்திப்ப தாக தொழிற்சங்கங்கள் புகார் எழுப்பியுள்ளன. இரு அரசுகளும்பெருமுதலாளிகளின் நலன்களே முக்கியம் எனக் குறிப்பிடும் விதத்தில், மக்கள்  வேலைகளுக்கு திரும்பினால்தான் இந்த கதை முடியும்என்று பிரேசில் ஜனாதிபதி பொல்சானரோ கூறியிருக்கிறார்.  இது பெருவாரியான மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆத்தி ரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

;