tamilnadu

காலத்தை வென்றவர்கள் : ஜான் ரீட் நினைவு நாள்....

ஜான் ரீட் ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்ஷ்விக் புரட்சிகுறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்னும் நூல் தொடர்பில் இவர் பெரிதும் அறியப்படுகிறார். மூலதனத்தினை எதிர்த்து ‘பீட்டர்சன் பாட்டாளி வர்க்கம் புரியும் போர்’ எனும் நாடகக் காட்சியை ஜான் ரீட் எழுதினார். புரட்சியுகக் கம்யூனிஸ்டு பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ‘லிபரேட்டர்’ எனும் ஏட்டிற்குக் கட்டுரைகள் எழுதுபவராகவும் இருந்தார். புதிய கம்யூனிஸ்ட் பத்திரிக்கையான ‘தொழிலாளர் குரல்’ ஜான் ரீட் டை ஆசிரியராகக் கொண்டிருந்தது.இவர் எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான லூய்சி பிரையன்ட் என்பவரை மணந்தார். ரீட் 1920ல் உருசியாவில் காலமானார். இவரது உடல் முக்கியமான உருசியத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட செஞ் சதுக்கத்தில் கிரெம்ளின் சுவர் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த மதிப்பு இவர் உட்பட இரண்டு அமெரிக்கர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

===பெரணமல்லூர் சேகரன்===
 

;