tamilnadu

img

அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத்தீ... 6 பேர் பலி... 

காலிஃபோர்னியா 
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான காலிஃபோர்னியாவின் நேபா கவுண்டி பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ந்து காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயினால் 4 லட்சம் ஹெக்டேர் பகுதியில் நாசமாகியுள்ளன. பல ஏக்கர் விளை நிலங்கள் ஒன்றுக்கும் உதவாமல் கருகியுள்ளன.  

அந்த பகுதியில் வெப்பக்காற்று தொடர்ந்து வீசி வருவதால் தீயை அணைப்பது சவாலான காரியமாக உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் வேதிப் பொருட்கள் தெளிக்கப்பட்டு தீயை அணிக்கும் முயற்சியில் அமெரிக்க தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுதீக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;