tamilnadu

img

இந்நாள் மே 28 இதற்கு முன்னால்

1830 - அமெரிக்காவின் ‘இண்டியன் ரிமூவல் ஆக்ட்’ நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கரையோரத் தில்தான் இங்கிலாந்தின் 13 குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தென்அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் போர்ச்சுகீசியர்களும், அருகிலேயே  சிறிய அளவில் டச்சுக்காரர்களும், மேற்குப் பகுதியிலும், வடஅமெ ரிக்காவின் தென்பகுதியிலும் ஸ்பானியர்களும் குடியேற்றங்களை அமைத்திருந்த னர். வடஅமெரிக்காவில் உட்புற நிலப்பரப்பில் குடியேற்றங்களை பிரெஞ்சுக்காரர் கள்தான் அமைத்திருந்தனர். அதன் மேற்குப் பகுதி பெரும்பாலும் குடியேற் றங்களுக்கு ஆட்படவில்லை. இங்கிலாந்தின் குடியேற்றங்கள் தாய்நாட்டுடன் போராடி, சுதந்திரம் பெற்று, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள்(அஐநா) என்ற பெயரில் தனி நாடானாதும், பிற குடியேற்றங்களும் தாங்களாகவும், போர், விலைக்கு வாங்குதல் உள்ளிட்ட அஐநா-வின் நடவடிக்கைகளாலும் அதனுடன் இணையத் தொடங்கியதால், அஐநா வடஅமெரிக்காவின் மேற்கு நோக்கி வேகமாக விரிவாகத் தொடங்கியது. ஏற்கெனவே, ஐரோப்பியக் குடியிருப்புகள் இருந்த பகுதிகளிலும்கூட, முழு நிலப்பரப்பும் அவர்கள் கட்டுப்பாட்டிலெல்லாம் இல்லை.  செவ்விந்தியர்கள் என்று (ஐரோப்பியர்களால்) பெயரிடப்பட்ட, தொல்குடிகளின் பல்வேறு குடியிருப்புகள் ஏராளமாக அழிக்கப்பட்டிருந்தாலும், ஐரோப்பியர்கள் இருந்த பகுதிகளிலேயே இன்னும் ஏராளமாக இருந்தனர்.

அவர்களை, அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றியதே ‘இண்டியன் ரிமூவல்’ என்றழைக்கப் படுகிறது. குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட காலத்தில், இனப்படுகொலைகள் உள்ளிட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டே நிலம் கைப்பற்றப்பட்டிருந்தாலும், அஐநா-வாக உருப்பெறத் தொடங்கிய காலத்தில், தொல்குடிகளின் உரிமைகளைக் காக்க குரல்கள் எழத்தொடங்கின. பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெஃபர்சன், ஜார்ஜ் வாஷிங்டன் உள்ளிட்டவர்கள் தொல்குடிகளை சகமனிதர்களாக ஏற்கவேண்டும் என்பதான கருத்துகளைக் கொண்டிருந்தனர். ஏராளமான சிறிய குழுக்களாக தொல்குடிகள் இருந்ததால், அவர்களைக் கையாளுவதில் குழப்பங்கள் இருந்தன. இந்நிலையில்தான் அஐநா-வுக்குள் அமைந்திருந்த தொல்குடியினரின் குடியிருப்புகளுக்கு மாற்றாக மிசிசிப்பி நதிக்கு மேற்கே இடம் அளிக்கும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. பேச்சுவார்த்தைகளின்மூலம் சுமுகமாக அவர்களை இடம்பெயரச்செய்ய மட்டுமே இச்சட்டம் வழிவகுத்தாலும், கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது  திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாகவே அமைந்தது. செரோக்கி, சிக்காசா, செமினோல், சாக்டா, முஸ்கோகி-க்ரீக் உட்பட தொல்குடி நாடுகளின் மக்கள் சொந்த மண்ணைவிட்டு விரட்டப்பட்டபோது, தாக்குதலிலும், நோய்களாலும் ஆயிரக்கணக்கில் பலியாயினர். 

- அறிவுக்கடல்

;