tamilnadu

img

இந்நாள் மார்ச் 18 இதற்கு முன்னால்

1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் விரைவு அஞ்சல் சேவை நிறுவனம் நியூயார்க் கில் தொடங்கப்பட்டது. இன்று கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனம்தான் இது! பொருட்கள், ஆவணங்கள், நிதி முதலானவற்றிற்கான விரைவு அஞ்சல் துறையில், நியூயார்க் மாநிலத்தில் போட்டியில்லாத ஒரே நிறுவனமாக விளங்கிய இது, பின்னர் ரயில், நீராவிப் படகுப் போக்குவரத்து நிறுவனங்கள், பிற மாநிலங்களி லிருந்த விரைவு அஞ்சல் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உடன்பாடுகள் செய்துகொண்டு, நாடு முழுவதற்கும் விரைவு அஞ்சல் சேவைகளை வழங்கத் தொடங்கியது. அமெரிக்க அரசின் அஞ்சல் துறை வழங்கிக்கொண்டிருந்த ‘மணி ஆர்டர்’ சேவையை 1857இல் தானும் தொடங்கியதன்மூலம், நிதித்துறையில் கால் பதித்தது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்.

1888-90இல் ஐரோப்பியப் பயணம் மேற்கொண்ட, இந்நிறுவனத்தின் தலைவர் ஜே.சி.ஃபார்கோ, அப்போது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட எல்சிக்களை(லெட்டர் ஆஃப் க்ரெடிட்) வைத்திருந்தபோதும், பெரிய நகரங்கள் தவிர, பெரும்பாலான இடங்களில் அதைக்கொண்டு பணம் பெற முடியாமல் சிரமப்பட்டதால், மார்செலஸ் பிளெமிங் பெரி என்ற ஊழியரிடம், எல்சிக்கு சிறந்த மாற்று ஒன்றை உருவாக்கச் சொன்னார். ஏற்கெனவே தாமஸ் குக் நிறுவனம், ‘சர்க்குலர் நோட்’ என்ற பெயரில் வழங்கிக் கொண்டிருந்ததை மேம்படுத்தி, ‘பயணிகள் காசோலை’ என்ற பெயரில் 1891இல் 10,20,50,100 டாலர் மதிப்புகளில் அவர் அறிமுகப்படுத்தினார். இன்றுவரை, மிக அதிகப் பயணிகள் காசோலைகளை வழங்கும் நிறுவனமாக அமெரிக்கன் எக்ஸ்பிரசே விளங்குவதுடன், பயணிகள் காசோலையே அந்நிறுவனத்தை ஒரு பன்னாட்டு நிறுவனமாகவும் மாற்றியது. முதல் உலகப்போரின்போது, இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ விரைவு அஞ்சல் நிறுவனமாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நியமிக்கப்பட்டது.

போரின் இறுதிக்கட்டத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை, ராணுவத் திற்குப் போதுமான ரயில் சேவைகள் கிடைக்காமல் செய்ததால், விரைவு அஞ்சல் நிறுவனங்கள் ரயில் நிறுவனங்களுடன் செய்திருந்த ஒப்பந்தங்களை அமெரிக்க அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்கன் ரயில்வே எக்ஸ்பிரஸ் ஏஜென்சி என்பதைத் தொடங்கிவிட்டு விரைவு அஞ்சல் துறையிலிருந்து வெளி யேறியது அமெரிக்கன் என்ஸ்பிரஸ். கடன் அட்டை என்பதை முதல் நிறுவன மாக 1946இல் இந்நிறுவனம் பரிசீலித்தாலும், 1950இல் டைனர்ஸ் கிளப் அறி முகப்படுத்தியபின், 1957இல்தான் கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தியது. 2007-08 நிதி நெருக்கடியின்போது, வங்கிகளுக்கு நிதியுதவி அளித்து வங்கி உரிமையாளர் நிறுவனமாகவும் இது மாறியது.

- அறிவுக்கடல்

;