tamilnadu

img

இந்நாள் மார்ச் 05 இதற்கு முன்னால்

1891 - தற்போதைய தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டியின் வடிவம் உருவாவதிலும், பரவுவதிலும் மிகமுக்கியப் பங் காற்றிய ‘நேஷனல் ஸ்போர்ட்டிங் கிளப்(என்எஸ்சி)’, லண்டனில் தொடங்கப்பட்டது. மனிதகுலத்தின் மிகப் பழைமையான விளையாட்டுகளில் குத்துச்சண்டை யும் இருந்திருக்கிறது. கி.மு.3000க்கு முந்தைய சுமேரிய நாகரிகத்தில் (தற்போ தைய இராக்), குத்துச்சண்டை பற்றிய சித்தரிப்புகள் கிடைத்துள்ளன. பண்டைய மத்தியக்கிழக்கு, எகிப்து ஆகிய பகுதிகளில், கி.மு.2000களில் குத்துச்சண்டை யின்போது, கையில் பட்டைகளை அணிந்திருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏஜியான் தீவுகளின் மினோவான் நாகரிகத்தில் கி.மு.1500களின் குத்துச்சண்டையில் கையுறை காணப்பட்டுள்ளது. கி.மு.1350 கால எகிப்திய சிற்பங்களில், குத்துச் சண்டை வீரர்களும், பார்வையாளர்களும் காணப்படுகின்றனர்.

சங்ககாலத்தில் (கிறித்துவுக்கு முன்பு) புகார் நகரின் போட்டி விளையாட்டு மன்றத்தில், கையால் தாக்கி விளையாடப்பட்ட விளையாட்டு பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு.688இல் நடைபெற்ற 23ஆம் ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச்சண்டை இடம்பெற்றது. பண்டைய ரோமில் புகழ்பெற்றிருந்த குத்துச்சண்டை, வாள் முதலான ஆயுதங்க ளை தரித்துக்கொள்ளும் பழக்கம் வந்தபின், முக்கியத்துவம் இழந்தது. ஆங்காங்கே எஞ்சியிருந்த இது, 15ஆம் நூற்றாண்டுக்குப்பின், வாள் தரித்துக் கொள்வது வழக்கொழியத் தொடங்கியபோது, மீண்டும் பரவத் தொடங்கியது. 1600களின் இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற்ற வெறும் (கையுறையற்ற) கை முட்டிகளால் சண்டையிடும் போட்டிகளின்போது உருவான பாக்சிங் என்ற பெயரின் தோற்றத்திற்கான தெளிவான காரணங்கள் தெரியவில்லை. 1838இல் உருவாக்கப் பட்ட லண்டன் பரிசு வளைய விதிகளில் பல இன்றும் நடைமுறையிலுள்ளன.

இதன் மேம்படுத்தப்பட்ட விதிகள், 1865இல் ஜான் சேம்பர்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டா லும், அதை 1867இல் உத்தரவாகப் பிறப்பித்த குவீன்ஸ்பெரியின் மார்க்கஸ் பெயரி லேயே குவீன்ஸ்பெரியின் மார்க்கஸ் விதிகள் என்று அழைக்கப்படுபவைதான், நவீன குத்துச்சண்டை விதிகளாக உள்ளன. 1891இல் உருவாக்கப்பட்ட, என்எஸ்சி இந்த விதி களை விரிவுபடுத்தி, பரிசுத் தொகையுடன்கூடிய தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டி பரவக் காரணமாகியது. 1929இல் பிரிட்டிஷ் பாக்சிங் கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டபோது, அதன் பெரும்பாலான உறுப்பினர்கள், என்எஸ்சியில் இருந்த வர்களாகவே இருந்தனர். உலக பாக்சிங் சங்கம்(டபிள்யூபிஏ), உலக பாக்சிங் கவுன்சில் (டபிள்யூபிசி), பன்னாட்டு பாக்சிங் கூட்டமைப்பு(ஐபிஎஃப்), உலக பாக்சிங் அமைப்பு (டபிள்யூபிஓ) ஆகிய நான்கும் தற்போதைய முக்கிய உலக சாம்பியன்ஷிப்களை தொழில்முறை குத்துச்சண்டைக்கு நடத்துகின்றன. ஒலிம்பிக்கில் இடம்பெறும், தலைக்கு பாதுகாப்புக் கவசம் அணிந்த குத்துச்சண்டை, தொழில்முறைக் குத்துச்சண்டை அல்ல!

- அறிவுக்கடல்

;