tamilnadu

img

இந்நாள் மார்ச் 04 இதற்கு முன்னால்

1790 - பிரெஞ்ச்சுப் புரட்சியின்போது ஏற்பட்ட புதிய அரசின் தேசிய அரச மைப்பு அவை, பிரான்சை, 83 டிபார்ட்மெண்ட்களாகப் பிரித்தது. டிபார்ட்மெண்ட்கள் என்பவை, இங்கி லாந்திலுள்ள கவுண்ட்டி, இங்கிலாந்தின் குடி யேற்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் அல்லது மாநிலங்கள் ஆகியவற்றைப் போன்றவை. உண்மையில், ஏற்கெனவே இருந்த ஆட்சியில், பிரான்ஸ் நாடு, ‘ப்ராவின்ஸ்’களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தப் ப்ராவின்ஸ்கள், நிலப்பிரபுக்களின் நிலவுடைமைகளுக்கு உகந்த வகையில் பிரிக்கப் பட்டிருந்தன. சொல்லப்போனால், இந்தியாவிலிருந்த குறுநில முடியரசுகளுக்கி டையே காணப்பட்டதுபோன்று, மாறுபட்ட பண்பாடுகள்கூட இந்த ப்ராவின்ஸ்களுக்கி டையே இருந்தன. ஒரே நாடு என்ற ஒருமைப்பாடு உருவாகவேண்டும் என்ற நோக்கில், அந்த பண்பாட்டுப் பாகுபாடுகள் முதலானவற்றிற்கு இடம் தராமல், அனைத்தும் கலந்திடும்வண்ணம், இந்தப் புதிய டிபார்ட்மெண்ட்கள் பிரிக்கப்பட்டன.

ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டின் நிலப்பரப்பின் எல்லைகளும், அதன் தலைமையி டத்திலிருந்து, (அக்காலத்திய வசதிகளில்) ஒரு நாளைக்குள் சென்றடைந்துவிடும் வகையில் வரையறுக்கப்பட்டன. இது, அடிக்கடி போர் நிகழக்கூடிய சூழல் நிறைந்த அக்காலத்தில், நாட்டின் நிலப்பரப்பு முழுவதும் போதுமான பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட டிபார்ட்மெண்ட்க ளுக்கு பெயரிடும்போதுகூட, பழைய பெயர்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டு, அவ்வப் பகுதியின் முக்கிய ஆறு, அல்லது பிற அடையாளங்கள் ஆகியவற்றை அடிப்படையா கக் கொண்டு பெயர்கள் சூட்டப்பட்டன. டிபார்ட்மெண்ட் என்ற பெயரே, பழைய அடையாளமே இருக்கக்கூடாது என்ற நோக்கில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது!

ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டுக்கும், இரண்டு இலக்க ‘அலுவல்முறை புவியியல் குறியீடு’ ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த டிபார்ட்மெண்ட்களை நிர்வகிக்கும் டிபார்ட் மெண்ட்டல் கவுன்சில் என்பது, அந்தந்த டிபார்ட்மெண்ட்டின் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்டாலும், டிபார்ட்மெண்டுக்கும், பிரான்சின் அரசுக்குமான உறவுகள் குறித்த தெளிவான விளக்கங்கள் அப்போது அளிக்கப்படவில்லை. அரசு நடைமுறைப் படுத்தும் கொள்கைகளை, கீழே எடுத்துச்செல்லும் கருவியாக டிபார்ட்மெண்ட் 1793இல் மாற்றப்பட்டது. ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் பல அரோண்டிஸ்மெண்ட்-களாகவும், ஒவ்வொரு அரோண்டிஸ்மெண்ட்டும் கேண்ட்டன்களாகவும் பிரிக்கப் பட்டன. டிபார்ட்மெண்ட்கள் தன்னாட்சிப் பெற்றவையாகவும், உட்பிரிவுகள் அவ்வாறு அன்றியும் இருந்தன. எண்ணிக்கை, எல்லை முதலான மாறுதல்களைத் தவிர்த்து, புரட்சிகர அரசு உருவாக்கிய இந்த டிபார்ட்மெண்ட் முறையே பிரான்சில் தொடருகிறது. 

- அறிவுக்கடல்