tamilnadu

img

இந்நாள் மே 30 இதற்கு முன்னால்

1431 - பின்னாளில் புனிதராக்கிய அதே கத்தோலிக்கக் கிறித்தவத்தால், மதக்கட்டுப்பாடுகளை மீறுதல், மாந்திரீகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜோன்-ஆஃப்-ஆர்க் உயிருடன் எரிக்கப்பட்டதாகக் கூறப் படுகிற நாள்! பிரான்சின் நாயகியாகவும், வீராங்கனை யாகவும் கொண்டாடப்படுகிற ஜோன்-ஆஃப்-ஆர்க், கொல்லப் பட்டபோது அவருக்கு வயது 19. ஓர் எளிய விவசாயியின் மகளாகப் பிறந்து, எவ்வித போர்ப் பயிற்சியும் பெறாத ஜோன்-ஆஃப்-ஆர்க், தெய்வீக சக்திகளால், நூறாண்டுப் போரின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் வெற்றிக்கே அடிப்படையாகும ளவுக்கு படைகளை வழிநடத்தினார் என்பதை, மறு ஆய்வு செய்யும் தற்காலத்திய வரலாற்றாசிரியர்கள் ஏற்கவில்லை. மாறாக, பிரெஞ்ச் அரசர் ஏழாம் சார்லசின் அரசுரிமையைப் பாதுகாக்குமாறு கடவுள் தன்னிடம் பேசினார். மணியோசைகள் கேட்டன என்பதான ஜோன்-ஆஃப்-ஆர்க்கின் கூற்றுகளை, தீவிரமான மூளை-நரம்பியல் பாதிப்பு, பல-ஆளுமை நோய் போன்றவையாகவே இன்றைய மருத்துவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், ஜோன்-ஆஃப்-ஆர்க் வந்தவுடன் ஆர்லியன்ஸ் மீட்கப்பட்டதே? லொரைனின் எல்லைப் பகுதியிலிருந்து, ஆயுதம் தாங்கிய பணிப்பெண் பிரான்சைக் காக்க வருவாள் என்றொரு கட்டுக்கதை நீண்டகாலமாக கூறப்பட்டு வந்தது. அந்தக் கதையே, குறிப்பிட்ட அந்தப் பகுதியிலுள்ள டோம்ரெமி-யில் பிறந்தவரான ஜோன்-ஆஃப்-ஆர்க்கை, கடவுள் தன்னை அனுப்பிருப்பதாக எண்ணிக்கொள்ளவும், தன்னிடம் புனிதர்கள் பேசியதாகக் கற்பனை செய்துகொள்ளவும் வழிவகுத்தது என்பதுடன், சோர்ந்திருந்த பிரான்சின் படைகள், கடவுளின் தூதர் வந்துவிட்டதாக நம்பியதும் வெற்றிக்குக் காரண மாகியது. அவர் அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகும் குழப்பமான மனநிலையைக் கொண்டவர் என்பது பொதுவாகவே ஏற்கப்பட்டிருக்கிறது.

படைகளை வழிநடத்து வதுகுறித்த ஆலோசனைகளை மட்டுமே வழங்கிய ஜோன்-ஆஃப்-ஆர்க், இருமுறை அம்புகளால் காயம்பட்டிருந்தாலும்கூட, எந்தக் களத்திலும் நேரடியாகப் போரிட வில்லை என்பதுடன், அவரது ஆலோசனைகளும் பல நேரங்களில் ஏற்கப்படவு மில்லை. (பிராட்டஸ்ட்டண்ட்டிசம் தோன்றியிராத!) அக்காலத்தில் இங்கிலாந்துக்கு ஆதரவாக இருந்த கத்தோலிக்கத் திருச்சபை, ஆண் உடை அணிந்ததை மதவிரோ தம் என்பதுட்பட 70 குற்றங்களைச் சாட்டி, ஆண் உடை அணியவில்லை என்று எழு திக்கொடுத்தபின் சிறையிலடைத்ததாகவும், பாலியல் தொல்லைகளைத் தவிர்க்க அவர் மீண்டும் ஆண் உடை அணிந்ததால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இடைக் காலத்தில், பிரபுக்களுக்கு உதவியாளர்களாக இருந்த பேஜ்-பாய் என்ற சிறு வர்களைப்போன்று ஜோன்-ஆஃப்-ஆர்க் முடிவெட்டியிருந்ததிலிருந்தே, பாப் கட்டிங் என்ற சிகையலங்காரம் 1909இல் பாரிசிலிருந்து பரவியது. இன்னும் சற்று நீண்ட முடியுடன் பேஜ்பாய் கட்டிங் என்பதும் 1950களில் தோன்றியது.

- அறிவுக்கடல்

;