tamilnadu

img

இந்நாள் மே 27 இதற்கு முன்னால்

1868 - அமெரிக்காவில் ‘அலங்கார நாள்(டெக்கரேஷன் டே)’முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதுவே தற்போது நினைவுநாள்(மெமோரியல் டே)’ என்றழைக்கப்படுகிற, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் நாளாகும். ராணுவ வீரர்களின் கல்லறைகளை அலங்கரித்து மரியாதை செய்ததால் அப்போது இப்பெயர்ஏற்பட்டது. அமெரிக்காவின் அப்பலாச்சிய மலைத்தொடர் பகுதியில்வசித்த மக்கள், அருகாமை காலத்தில் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அலங்கார நாள் நடத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வெகுதொலைவிலுள்ள உறவினர்களும் வந்து பங்கேற்கும் இந்நிகழ்ச்சி,உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் விருந்தாக நடைபெற்றிருக்கிறது. இது அமெரிக்காவின் நினைவுநாள் ஆனதற்கான தொடக்கம்குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. 1861-65இல் நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப்போரில் இறந்த வீரர்களுக்கான முதல் இடுகாடு வர்ஜீனியாவில் அமைக்கப்பட்டது. இதில், 1861 ஜூன் 3இல்அலங்கார மரியாதை செய்யப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. கெட்டிஸ்பர்க் போரில் இறந்த வீரர்கள் உட்பட, 3512 பேரின் கல்லறைகள்கொண்ட, கெட்டிஸ்பர்க் தேசிய இடுகாட்டில் 1863இல் அலங்காரமரியாதை செய்யப்பட்டுள்ளது. 1865 ஏப்ரலில் ஆப்ரகாம் லிங்கன்படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நினைவுநாள் கடைப்பிடிப்பது பரவலானது. உள்நாட்டுப்போரில் பலியான ஆறு லட்சத்துக்கும்மேற்பட்ட வீரர்களின் கல்லறைகளைப் பராமரிப்பதற்காக, தேசிய இடுகாட்டுத்துறை அவ்வாண்டில் உருவாக்கப்பட்டது. அவ்வாண்டின்மே 1இல், அப்போதுதான் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தசுமார் பத்தாயிரம் ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், பேரணியாகச் சென்று, உள்நாட்டுப்போரில் பலியான 257 வீரர்களின் கல்லறையில் மரியாதைசெலுத்தினர். 1868 மே 30இல் 27 மாநிலங்கள் இந்த மரியாதையைச் செய்ததைத்தொடர்ந்து, அமெரிக்கா முழுமையும் ஏற்கப்பட்டு,1970வரைஇந்நாளே கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. 1882இல் நினைவுநாள் என்றபெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டாம் உலகப்போர்வரை அலங்கார நாள் என்பதே தொடர்ந்தது. 1966இலிருந்து தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்ட இது, 1968இல் இயற்றப்பட்டசீரான திங்கட்கிழமை விடுமுறைச்சட்டத்தைத் தொடர்ந்து,1971இலிருந்துமே மாதத்தின் கடைசித் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டது. இதுதவிர, ஆயுதப்படைகள் நாள், முன்னாள் படைவீரர்கள் நாள் ஆகியவையும் அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படுகின்றன.         

;