tamilnadu

img

இந்நாள்... பிப்ரவரி 23 இதற்கு முன்னால்...

1886 - சார்லஸ் மார்ட்டின் ஹால் என்ற அமெரிக்கர், பெரு மளவில் அலுமினியத்தைப் பிரித்தெடுப்பதற்கான முறையை கண்டுபிடித்தார். இதே ஆண்டில், இவருக்குத் தொடர்பின்றி, இதே முறையை, பிரான்சில் பால் ஹெரோல்ட் என்பவரும் கண்டு பிடித்ததால், இருவரின் பெயரும் சேர்த்து ஹால்-ஹெரால்ட் முறை என்று பெயரிடப்பட்டது. அப்போது இருவருக்குமே வயது 22! கி.மு.5ஆம் நூற்றாண்டிலிருந்தே, சாயமேற்றுவதில் பயன்படுத்தப்பட்டு வந்த படிகாரம் (அலும் என்ற ஆங்கிலப் பெயர், அலுமின் என்ற லத்தீன் பெயரிலிருந்து உருவானது.) ஓர் அலுமினியச் சேர்மமே. ரோமப் பேரரசருக்கு வழங்கப்பட்ட ஒரு  குவளை செய்யப்பட்டிருந்த, அவர்கள் அறிந்திராத ஓர் உலோகம் பற்றி பெட்ரோனியஸ், மூத்த பிளினி உள்ளிட்ட பலரும் எழுதியுள்ளவற்றிலிருந்து, அது அலுமினியமாக இருந்தி ருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதை உருவாக்கிய கொல்லர் மட்டுமே அந்த உலோகத்தைப் பற்றி அறிந்திருந்த நிலையில், அது தங்கத்தின் மதிப்பைக் குறைத்துவிடும் என்று, அவரை அரசர் கொன்று விட்டதாக பல கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், ஓர் உலோ கமாக அலுமினியத்தின் பயன்பாடு அதன்பின் அறியப்படவில்லை.

1595இல் படிகாரம் உருவாகக் காரணமான, அறியப்படாத மண்ணிற்கு அலுமினா என்ற பெயரை ஜெர்மனியின் ஆண்ட்ரூ லைபாவியஸ் சூட்டி னார். அதை மின்னாற்பகுப்புச் செய்த ஹம்ஃப்ரி டேவி-தான், 1818இல் அலுமினியம் என்ற பெயரைச் சூட்டினார். டென்மார்க்கின் கிறிஸ்டியன் ஓர்ஸ்டெட் 1824இல் பிரித்தெ டுத்தபின் அலுமினியம் பயன் பாட்டுக்கு வந்துவிட்டது. உண்மையில், உலகில் ஆக்சிஜன், சிலிக்கன் ஆகிய வற்றுக்கடுத்து, மூன்றாவது அதிகமுள்ள தனிமம் அலு மினியம்தான் என்றாலும், பாக்சைட் உள்ளிட்ட சேர்மங்களாக மட்டுமே கிடைக்கிறது. முந்தைய முறைகளைவிட மிகக்குறைந்த செலவில் ஹால் -ஹெரால்ட் முறையில் பிரிக்க முடிந்ததால் அலுமினியம் ஏராளமாகப் பயன்பாட்டுக்கு வந்தது. 1888இல் கண்டுபிடிக்கப்பட்ட பேயர் முறையும் அலுமினியத்தின் வளர்ச்சிக்கு உதவியது. குறைந்த அடர்த்தி, எடை, துரு போன்ற பாதிப்புகள் கிடையாது என்பனவற்றால் விமானங்கள், வாகனங்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டாலும், உலோகக் கலவையாகவே (அலாய்) அலுமினி யம் பயன்படுத்தப்படுகிறது. இன்று, உலகில் இரும்புக்கு அடுத்து அதிகம் உற்பத்தி செய்யப்படும் உலோகம் அலுமினியம்தான். மறுசுழற்சிக்கான செலவும் இழப்பும் மிகக்குறைவு என்பதால் உணவுத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் அலுமினியம், மனிதன் உள்ளிட்ட விலங்குகளின் உடலில் காணப்படுவதில்லை என்றாலும், பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

- அறிவுக்கடல்

;