ஜான் கீட்ஸ் நினைவு நாள்
ஆங்கில இலக்கியத்தின் குறிப் பிடத்தக்க கவிஞர் ஜான் கீட்ஸ். இவர் இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப் படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கியக் கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் மில்டன், ஷேக்ஸ்பியர் ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாகத் திறனாய்வாளர்கள் கருது கின்றனர். இவரது ஆக்கங்களில் To Autumn என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ள தோடு இலங்கையில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் இடம் பெற்றுள்ளது.
ஜான் கீட்ஸ் இரண்டாம் தலைமுறை காதல் கவிஞர்களில் (ஜார்ஜ் கோர்டன் பைரன் மற்றும் பெர்சி பைச்சு ஷெல்லி) ஒரு வர். இவருடைய படைப்புகள் இவர் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகே வெளியிடப் பட்டன. இவர் வாழ்ந்தபோது இவருடைய படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெறாது போனாலும் இறந்த பிறகு, அவை பெரிதும் போற்றப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண் டின் முடிவில் எல்லோராலும் போற்றப்படும் ஒரு ஆங்கிலக் கவியாகப் புகழ் பெற்றார். இவருடைய படைப்புகள் பல கவிஞர்கள் எழுத்தாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளன. ஜார்ஜ் லூயிஸ் போர்க்ஸ் தனது வாழ்நாளில் கீட்ஸின் கவிதைகளைப் படித்த நாள் அன்று தான் தனக்கு முதல் இலக்கிய அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். கீட்ஸின் கவிதைகள் பெரும்பாலும் உருவ கங்களைக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன. இது எல்லா காதல் கவிஞர்களுக்கும் பொது வானதாகும். உருவகங்களைக் கொண்டே உணர்வுகளைத் தூண்டும்விதமாக இவரது கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன.
இன்று இவரது கவிதைகளும் கடிதங் களும் ஆங்கில இலக்கியத்தில் மிகவும் புகழப்படுகின்றன, ஆராய்ச்சிக்குப் பயன்ப டுகின்றன. இவருடைய முக்கியமான படைப்புக்கள் “நான் ஒரு சின்ன குன்றின் மீது ஏறி நின்றேன்”, “தூக்கமும் கவிதையும்” மற்றும் பிரபலமான “முதன் முதலில் சாப்மனின் ஹோமரைக் கண்டபோது”.
பெரணமல்லூர் சேகரன்