tamilnadu

img

இலங்கையில் 3 புதிய அமைச்சர்கள் நியமனம்

கொழும்பு, ஜுன் 10- இலங்கையில் புதிய கேபினட் அந்தஸ்துள்ள நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர்.  அவர்களில் மூன்று பேர் வகித்த பதவிகளுக்கு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியால் திங்களன்று நியமிக்கப் பட்டனர். ரவூப் ஹக்கீம் பதவி வகித்த நகர திட்டமிடல், நீர் வழங்கல் துறைக்கு அதன் ராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்த்தனவும், றிசாட் பதியுதீன் பதவி வகித்த கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் துறைக்கு, அதன் பிரதியமைச்சர் புத்திக பத்திரனவும், கபீர் ஹாசீம் பதவி வகித்த பெட்ரோலிய வள அபிவிருத்தி துறைக்கு, அதன் பிரதியமைச்சர் அனோமா கமகேவும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.எச்.எம். ஹலீம் பதவி வகித்த அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார துறைக்கு, இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை. அண்மையில் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்களும், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுமான ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை மொத்தமாக ராஜினாமா செய்திருந்தனர். தற்போது இலங்கை அரசாங்கத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;