tamilnadu

img

மன அழுத்தத்துக்கும், மாசுபாடுகளுக்கும் தொடர்பு உள்ளது

சிகாகோ, ஆக.22- மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கும் சூழல் மாசுபாடுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், டென்மார்க்கின் ஆர்ஹஸ்  என்ற ஆய்வு நிறுவனத்தோடு இணைந்து இரு நாடுகளிலும் மாசு அதிகமுள்ள நகரங்களில் வசிக்கும் சுமார் 15 கோடி மக்களின் தகவல் தரவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, அதிக மாசு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களில் சராசரியாக 27 சதவீதம் பேர் பைபோலார் டிஸார்டர் என்ற நோய்க்கு ஆளாவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் பேர் கடும் மன உளைச்சல், மன அழுத்தத்துக்கும், 10 வயதுக்குட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மனச்சிதைவு நோய்க்கும் ஆளாவதாக கணித்துள்ள னர். சுற்றுச்சூழல் மாசு மட்டுமின்றி மக்கள் தொகைப்பெருக்கமும், பசுமையிலிருந்து விலகி இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

;