tamilnadu

img

தென் அமெரிக்க நாடுகளும்- பொலிவியாவும்

பொலிவியாவில் ராணுவ தலைமையும், எதிர்க்கட்சிகளும் மறு தேர்தல் கேட்டன. மேட்டுக் குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். மோதலில் மக்களின் உயிர் பலியாகக் கூடாது என்பதாலும் மறு தேர்தல் நடத்தவும் பதவியை ஜனாதிபதி  ஈவோ மொரேல்ஸ் துறந்தார்..
இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் தலையை கொய்ய ராணுவ தளபதி 50 ஆயிரம் டாலர் அறிவிப்பு செய்தான்.
பழைய காலமாக இருந்தால் அவரை வீட்டீலேயே ராணுவ தளபதி கொன்று இருப்பான். ஆலன்டேயை பினோசெட் கொன்றது போல் இவரை கொன்று இருப்பான்.  ஈவோ மொரேல்ஸ்  பொலிவிய நாட்டு விவசாயிகளும் தொழிலாளர்களும் நேசிக்கும் தோழன் மட்டுமல்ல தென் அமெரிக்க நாடுகளின் மக்களால் நேசிக்கப்படுபவர். தென் அமெரிக்க நாடுகளை மனமுவந்து இணையும் சோசலிச கூட்டணி நாடுகளாக ஆக்கிட சேகுவேரா முயற்சியின் தொடர்ச்சியாக பொலிவோரியன் புரட்சி என்ற பெயரில் ஈவாமுரேல் அடி எடுத்துவைப்பதால் தென் அமெரிக்க கார்ப்பரேட் அரசியல் வாதிகளுக்கு இவரைப் பிடிக்கவில்லை! அமெரிக்க நிற வெறியர்கள் கென்னடியை கொல்ல ஒரு கிறுக்கனை தயார் செய்தது போல் இங்கேயும் அரங்கேற்ற முயன்றனர்..
 ஈவோ மொரேல்ஸ் தலைமறைவாக மெக்சிகோ போகவில்லை பெரும் திரள் மக்கள் வழி அனுப்பிவைக்க விமானத்தில் ஏறியே சென்றுள்ளார். மெக்சிகோவின் இன்றைய ஜனாதிபதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உறுதியாக எதிர்ப்பவர் இவர் அழைக்கவே  ஈவோ மொரேல்ஸ் சென்றார்.
அதே வேளையில் ஜனாதிபதி தேர்தலில் கார்ப்பரேட்டுகளின் ஆதரவு பெற்ற வேட்பாளாராக நின்று தோல்வியை தழுவிய அம்மையார் ஜியனைன் ஆனீஸ் தன்னை தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்துள்ளார் . தேர்தலை நடத்தவே பொறுப்பேற்று இருப்பதாக அம்மையார் அறிவித்துள்ளார்.
வரலாறு காட்டுகிறது
.
தென் அமெரிக்க நாடுகள் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளுக்கு ஒரு காலத்தில் அடிமைப்பட்டுக்கிடந்த து பின்னர் நவீன பூர்சுவா தாராளவாத அரசியலின் குரு பீடமான அமெரிக்கா தலையிட்டு, சுதந்திரமான ஆனால் ராணுவ சர்வாதிகாரிகளை கொண்ட நாடுகளாக்கியது..
மெக்சிகோவும் அதற்கு தெற்கே உள்ள நாடுகளும் ராணுவ சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு அமெரிக்கா எல்லா வகையிலும் துணை நின்றது. பெட்ரோலியம் உட்பட கனிம வளங்கள், தாவர வளங்கள் அனைத்தும் அமெரிக்க கார்ப்பரேட்களின் வேட்டைக்காடானது.
சுரங்கங்கள், எண்ணெய் வளங்கள் இவைகளில் அமெரிக்க கார்ப்பரேட்களின் நேரடி முதலீடுகளும் விவசாய உற்பத்தியில் கொக்கோ பழங்கள் ( வாழை அவகோடா) காஃபி ஆகிய தோட்டப்பயிர்கள் அவைகளை ஏற்றுமதி செய்யும் உள்ளூர் கார்ப்பரேட்களை உருவாக்குவதின் மூலமும் அமெரிக்க கார்ப்பரேட்களின் ஆதிக்கம் படர்ந்தது.
. .. இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் நாட்டு பெருமுதலாளிகள் அரசியல் வாதிகள் போல் லாபங்களை எல்லாம் டாலராக மாற்றி உலக பங்குச்சந்தையில் முதலீடாக்குவதே தொழிலாக கொண்டிருக்கின்றனர். தொழிலும் விவசாயமும் வளர்ந்தாலும் மக்களை வறுமையிலிருந்து மீட்க உதவவில்லை
நெடு நாட்களாக தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் பூர்சுவா தாராளமய அரசியலும் பல ரகமான சோசலிச அரசியலும் மோதுகிற களமாக இருந்து வருவதை காண்கிறோம் இடது சாரி தலைவர்களுக்கு மார்க்சிய சித்தாந்தம் வழிகாட்டியாக இருப்பதையும் காண்கிறோம்.
ஆனால். கியூபா நாட்டில் காஸ்ட்ரோ சேகுவேரா இணைந்து லெனின் காட்டிய வழியில் பாட்டாளி வர்க்க ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின்படி கட்சியை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர் மற்ற நாடுகளில் அது வெற்றி பெறவில்லை அங்கு மக்கள் அரசியலில் ஊசலாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
டாலர் ஆதிக்கத்தை எதிர்க்கும் கலையை மக்கள் போராட்ட களத்திலேதான் கற்க வேண்டும். பொலிவேரியன் புரட்சி வெற்றி பெறுகிறவரை  ஈவோ மொரேல்ஸ்கள்  தோன்றுவது தொடரும்.
 

;