tamilnadu

img

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை  40 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை

மாஸ்கோ:
ரஷ்யா கண்டுபிடித்துள்ள  கொரோனா தடுப்பு மருந்தை அடுத்த வாரம் 40ஆயிரம் பேருக்குச் செலுத்திசோதிக்க இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகிலேயே முதன்முதலாக தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. அந்தத் தடுப்பு மருந்து உடலில் நிலையான நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி வருவதாகவும், திறன்மிக்க வகையில் கொரோனா வுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார்.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண்அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோத னையில் மூன்றாம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.ஆனாலும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில்  ரஷ்ய அதிபர்புடின் தனது மகளுக்கே இந்த மருந்தைச்செலுத்தினார் .ஆனால் உலக சுகாதாரஅமைப்பு இந்த மருந்தை அங்கீகரிக்க வில்லை.இந்த நிலையில் மூன்றாம் கட்டப் பரிசோதனையாக அடுத்த வாரம் 40 ஆயிரம் பேருக்கு ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

;