tamilnadu

img

ஊரடங்கு பிறப்பிக்க மறுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.

அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1900க்கும் மேல் உள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்றை ’அறிவால்’ வெல்ல வேண்டும் என அந்நாட்டு மக்களிடம் பிரதமர் இம்ரான்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

பிற தெற்காசிய நாடுகளில் என்ன நிலை?

வங்கதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் அங்குச் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். நேபாளத்தில் இதுவரை ஐந்து பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலிருந்து வெளியேறும் அந்நாட்டுத் தொழிலாளர்களின் விவரங்களை நேபாளம் திரட்டி வருகிறது.

இந்தியாவில் சிக்கியிருக்கும் நேபாள மக்களை அனுமதிக்காமல் நாட்டின் எல்லை மூடப்பட்டதற்கு பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கையில் நேபாளம் ஈடுபட்டுள்ளது.

;