tamilnadu

img

சம்ஜவுதா விரைவு ரயிலை நிறுத்தியது பாகிஸ்தான்

டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா விரைவு ரயிலை பாகிஸ்தான் அரசு நிறுத்தி உள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை இந்தியா திரும்ப பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அரசு பல்வேறு அறிவிப்புகள் விடுத்தது. நேற்று இரவு, இந்தியா விமானங்கள் பறப்பதற்கான 3 வான் வழிகளை மூடியது. இந்நிலையில், தற்போது சம்ஜவுதா விரைவு ரயிலை அட்டாரியில் பாகிஸ்தான் நிறுத்தப்பட்டுள்ளது. சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

வாரத்திற்கு இரண்டு முறை ஓடும் இந்த ரயிலில், ஏற்கனவே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தவர்கள், தங்கள் பணத்தை லாகூர் டி.எஸ் அலுவலகத்திலிருந்து திரும்பப் பெறலாம் என அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இந்திய திரைப்படங்கள் இனி பாகிஸ்தானில் திரையிடப்படாது எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 
 

;