tamilnadu

img

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம்

கொழும்பு, நவ. 20- ரணில் விக்ரமசிங்க இலங்கை பிரதமர்  பதவியிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியும், தனது மூத்த சகோதரருமான மகிந்த ராஜபக்சேவை பிரதமராக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். இலங்கையில் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா சார்பில்  போட்டியிட்ட கோத்தபய ராஜ பக்சே வெற்றி பெற்றார். இலங்கையில் ஆளும் அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி வசமும், ஜனாதி பதி பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமும் உள்ளதால் நாட்டை சரியான  முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல  முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த விஷயங்களை கருத்தில் கொண்டே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இரண்டு கட்சிகள் நாட்டை ஆட்சி செய்கின்றமையினால், எதிர்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் என்ற விஷயத்தை கருத்திற் கொண்டு சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலை வர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத் திருந்தார். நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய  செவ்வாயன்று அறிக்கை விடுத்திருந்தார். அதில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்த முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும். பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை இடைகால அமைச்சரவை ஏற்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி வரை இடைகால அர சாங்கம் ஒன்றை நடத்தி செல்லும் வகை யில், கோத்தபய ராஜபக்சேவிற்கு சந்தர்ப் பத்தை வழங்கி, ரணில் விக்ரமசிங்க பிரத மர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, எதிர்வரும் நாட்களில் கோத்தபய ராஜபக்சே இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

;