tamilnadu

img

மிரட்டும் கொரோனா... மிரளும் பிரான்ஸ் மக்கள்...

பாரீஸ் 
ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடான பிரான்ஸில் மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்தது. ஏப்ரல் கடைசி வாரம் வரை மிரட்டிய கொரோனா 2 லட்சம் பேரை மருத்துவமனைக்கு அனுப்பியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கொரோனா, மே மாத இறுதியில் தனது பரவல் வேகத்தை குறைத்தது. 

அதன்பின் அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், ஆகஸ்ட் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவியது. 2-வது அலையின் உச்சமாக கடந்த 7 நாட்களில் அங்கு தினசரி பாதிப்பு 4 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக (2-வது அலையின்) 5,413 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர். 

பிரான்ஸ் நாட்டில் மட்டும்மல்லாது இத்தாலி, ஜெர்மனி, உக்ரைன், பெல்ஜியம், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐரோப்பா மக்கள் மீண்டும் கலக்கத்தில் உள்ளனர். 

பிரான்ஸ்.... 

மொத்த கொரோனா பாதிப்பு - 2.77 லட்சம் 

பலி எண்ணிக்கை  - 30,606 

குணம்  - 86,177     

;