tamilnadu

img

இந்திய, சீன அமைச்சர்கள்  மாஸ்கோவில் சந்திப்பு சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்

பெய்ஜிங்:
ரஷ்யாவில் நடைபெறுகின்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள்  மாநாட்டில் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்  கூட்டம் நடைபெறும்என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.இந்த மாநாட்டுக்கு இடையில் ரிக் (ரஷ்யா, இந்தியா, சீனா) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறும்என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டுக்கு இடையில் மதிய உணவு நேரத்தின்போது ரஷ்யா,இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாஹோ லிஜியான் கூறினார்.

;